
அமெரிக்க இசை உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய மைக்கேல் ஜாக்சன் (50), மரணம் அடைந்துவிட்டார். பாப் பாடகர், பாடலாசிரியர், இசை தயாரிப்பாளர், டான்சர், நடிகர் மற்றும் தொழில் அதிபர் என்று மைக்கேல் ஜாக்சனுக்கு பல முகங்கள் உண்டு.
1958 ஆக. 29ல், ஜோசப் வால்டர் மற்றும் காதரின் எஸ்தர் ஆகியோருக்கு, ஏழாவது மகனாக, இண்டியானா நகருக்கு அருகிலுள்ள கேரி எனும் இடத்தில் பிறந்தவர் ஜாக்சன். இவரது குடும்பம் சாதாரணமானது. வீட்டில் மொத்தம் 9 பிள்ளைகள். 11 வயதிலேயே அவரது சகோரர்களுடன் இணைந்து " தி ஜாக்சன் 5' இசை நிகழ்ச்சி நடத்தினார் மற்றும் ஆல்பங்களை வெளியிட்டார். "ஐ வான்ட் யூ பேக்' எனும் ஆல்பம் மிகவும் பிரபலம் ஆனது.
சகோதரர்களுடன் தொடர்ச்சியான "ஹிட்' ஆல்பங்களை கொடுத்துக் கொண்டிருந்த ஜாக்சன், 1971ம் ஆண்டு முதல் இசை உலகின் தனது தனி பிரவேசத்தை மேற்கொண்டார். 1972ல் "காட் டு பி தேர்' எனும் ஆல்பம், 1979ல் "ஆப் தி வால்' எனும் "டிஸ்கோ டான்ஸ்' இசை நிகழ்ச்சி, 1982ல் "திரில்லர்' ஆல்பம், 1987ல் "பேட்' , 1991ல் "டேஞ்சரஸ்' மற்றும் 1995ல் "ஹிஸ்டரி' ஆகிய ஆல்பங்கள் சக்கை போடு போட்டன.
1980களில் இவர் அமெரிக்க இசை உலகின் தனி ராஜாவாக (தி கிங் ஆப் பாப்) உருவானார். அப்போதுதான் எம்.டி.வி., உருவாகியிருந்த நேரம். இந்த "டிவி' ஜாக்சனின் நிகழ்ச்சியால் பிரபலம் அடையத் தொடங்கியது. "பீட் இட்', "பில்லி ஜீன்' மற்றும் "திரில்லர்' ஆகிய இசை நிகழ்ச்சிகள் எம்.டி.வி.,யின் "ஹிட்' நிகழ்ச்சிகள்.
1990களில் "பிளாக் ஆர் ஒயிட்' மற்றும் "ஸ்கிரீம்' ஆகிய நிகழ்ச்சிகள் எம்.டி.வி.,யின் புகழை உச்சிக்கு எடுத்து சென்றன. ஜாக்சனின் நடனம் மிகவும் வித்தியாசமானது. அதற்கு முன் யாரும் அதுபோன்று நடனம் ஆடியது இல்லை. மிகவும் சிக்கலான உடல் அசைவுகளை வெளிப்படுத்தும் விதத்தில் அவர் ஆடினார். ரோபோ நடப்பது போன்றும், நிலவில் காலடி எடுத்து வைத்த வீரர்கள் போன்றும் மேடையில் ஜாக்சன் ஆடியது, ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது.
உலகம் முழுவதும் 75 கோடி ஆல்பங்கள், 13 கிராம்மி விருதுகள் பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது என ஜாக்சனின் புகழ் உச்சிக்கு சென்றது. அமெரிக்காவில் பாப், ராக் இசையில் 1980களில், மைக்கேல் ஜாக்சனுக்கு ஈடு இணை யாரும் இல்லை என்ற அளவில் உயர்ந்தார். ராணுவ உடை போன்ற உடைகளையே அவர் மேடையில் விரும்பி அணிவார். அவருக்கு நிறுவப்பட்ட பெரும்பாலான சிலைகள் அந்த தோற்றத்திலேயேதான் உள்ளன.
20ம் நூற்றாண்டின் மாபெரும் ஹீரோவாக விளங்கியவர். ஆனால், அவர் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் புகழ் சரிந்து, வீழ்ச்சி அடைந்தவராக காணப்பட்டார்.
அவர் பலமுறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது, போதை, தவறான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது ஆகியன வீழ்ச்சிக்கு காரணங்கள். பிளாஸ்டிக் சர்ஜரி செய்த இடங்களில் புற்றுநோய் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. என்றாலும் தனது இசை உலக மறு பிரவேசத்தை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார். அடுத்த மாதம் முதல், 2010ம் ஆண்டு வரை லண்டனில் 50 இசை கச்சேரிகளுக்கு அவர் திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் இன்னொரு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவும் திட்டமிட்டிருந்தார்.
மாரடைப்பால் ஜாக்சன் நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலமானார். ஜாக்சன் மரணம் இசை உலகத்திற்கு பெரும் இழப்பு ...
நடன சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் மரணம்
சென்னை ஐகோர்ட்டின் வித்தியாசமான தண்டனை
இலங்கை பிரச்சனையில் தமிழர்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட போது சிலர் தேசியக் கொடியை எரிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் தங்களை பிணையில் விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ரகுபதி, தேசியக் கொடியின் மகத்துவத்தை அவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் அவர்கள் தினந்தோறும் தேசியக் கொடியை தங்கள் வீட்டின் முன் காலை 6 மணிக்கு ஏற்றி மாலை 6 மணிக்கு இறக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை அவர்கள் நிறைவேற்றுகிறார்களா என்பதை கோவை போலீசார் கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இது தவிர அவர்கள் அனைவரும் ஏதேனும் ஓர் அiனாதை இல்லத்திற்கு சென்று 3 மணி நேரம் சேவை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் தலா 10 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகை செலுத்தி அவர்களை விடுதலை செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனந்த பவன்-ல் மக்கள் ஆதங்கம்

படத்தில் இருக்கும் இந்தக் கட்டிடம் என்ன என்று தெரிகிறதா? இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் முன்னோருக்கு சொந்தமான வீடுதான் இது. ஆனந்த பவன் என்ற இந்த வீடு அலகாபாத்தில் உள்ளது.
இந்த வீட்டிற்கு இன்றும் ஏராளமான மக்கள் வந்து ஜவஹர்லால் நேரு, அவரது தந்தை மோதிலால் நேரு அவரது மகள் இந்திரா ஆகியோரது அறைகளை பார்வையிட்டு செல்கின்றனர். காந்தி வரும் போதெல்லாம் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையையும், காங்கிரஸ் கூட்டம் நடைபெறும் அறையையும் மக்கள் ஒரு கோயிலைப் போல் தரிசித்துச் செல்கின்றனர்.
ஆனால் அவர்கள் அனைவரது மனத்திலும் ஒருவித ஏக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. நேருவை மட்டுமல்ல, அவரைத் தொடர்ந்து 6 பிரதமர்களை இந்த நாட்டிற்கு அளித்த உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று பதவியில் உள்ளவர்களில் 40 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் குற்றப்பின்னணி கொண்டவர்களாவர்.
அலகாபாத்தில் உள்ள புல்பூர் என்ற தொகுதியில் இருந்துதான் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பிரதமரானார். அவருக்குப் பின்னால் பிரதமர்களாக இருந்த லால் பகத}ர் சாஸ்திரி மற்றும் விபி சிங் ஆகியோர் இங்கிருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரே பரேலியில் இருந்து தான் இந்திரா காந்தியும், அமேதியில் இரந்து ராஜீவ் காந்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் ஆனார்கள்.
இங்கிருந்து மேலும் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்னோவில் இருந்து தேர்தந்தெடுக்கப்ட்டவர்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். மற்ற முன்னாள் பிரதமர்களான சரண்சிங் மற்றும் சந்திரசேகர் ஆகியோரும் உத்தர பிரதேசத்திலிருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆனால் இன்று உத்தர பிரதேசத்தில் உள்ள நிலைமை தலைகீழாக இருக்கிறது. உத்தர பிரதேச சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் 40 சதவிகிதம் பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாகவும் உள்ளனர்.
நேரு போன்ற நேர்மையான மனிதர்களை அனுப்பிய உத்தர பிரதேசத்தில் தற்போது இதுதான் நிலைமை என்பது வருத்தமளிப்பதாக உள்ளது என்கிறார் காந்திய அமைப்பு ஒன்றை சேர்ந்த மிஸ்ரா.
நேரு பிரதமராக இருந்தபோது, தனது தொகுதியான அலகாபாத்துக்கு எதுவும் செய்ய மறுத்துவிட்டார். பிரதமராக இருக்கும் போது நாடு முழுவதும் தமக்கு முக்கியம் என்றும், அலகாபாத்துக்கு ஏதாவது செய்தால் சலுகை காட்டுவதாக விமர்சனம் வரும் என்று எருதினார் என்று கூறிய மிஸ்ரா, ஆனால் தற்போது உள்ளவர்கள் நேர் எதிராக உள்ளனர் என்றார். முன்னாள் முதல்வர் முலாயம் சிங் தன் கிராமத்திற்காக ஒரு விமான நிலையத்தை உருவாக்கியதை அவர் இதற்கு உதாரணமாக சுட்டிக் காட்டினார்.
என்னையே பலி கொடுக்கிறேன் - கருணாநிதி

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி இன்று திடீரென காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
இலங்கையில் போரின் காரணமாக, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில், உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று தங்கள் தரப்பு போரை நிறுத்திக் கொள்வதாக விடுதலைப்புலிகள் நேற்று அறிவித்தது.
ஆனால், வேண்டுமானால் சரணடையுங்கள்; போரை நிறுத்த முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இந்த நிலவரம் பற்றி முதல்வர் கருணாநிதி நேற்றிரவு கூறுகையில், "இன்னும் ஓர் இரவு காத்திருப்போம்," என்று கூறினார்.
இந்நிலையில், முதல்வர் கருணாநிதி இன்று அதிகாலையில் திடீரென காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
இலங்கையில் போர் நிறுத்தப்படும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்து, சென்னை அண்ணா நினைவிடம் முன்பு இன்று அதிகாலை திடீரென வந்து, தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
இலங்கை தமிழர்களுக்காக என்னையே பலி கொடுக்க தயாராகிவிட்டேன் என்று முதலமைச்சர் மு கருணாநிதி கூறியுள்ளார்.
உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி கூறியதாவது
தமிழக மக்களின் சார்பாக இலங்கை தமிழர்களை பாதுகாக்க நேற்று வரையில் நம்பிக்கை தரும் அளவுக்கு இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யும் என்ற நிலை மாறி விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவித்த பிறகும் அதை ஏற்க முடியாது என்று கூறிய காரணத்தால் நேற்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து செய்தி எதிர்பார்த்து இலங்கையில் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்ய முன்வராத காரணத்தால் என்னையே நான் அர்ப்பணம் செய்து கொள்ள, ராஜபக்சே செய்த பலிகளிலே நானும் ஒரு பலியாக, எல்லா தமிழர்களின் சார்பாக இந்த உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளேன். திமுகவினர் யாரும், அமைச்சர்களாக இருந்தாலும்,. எம்பி, எம்எல்ஏவாக இருந்தாலும் ஈடுபட வேண்டாம். நான் ஒருவன் அதற்காக என்னையே பலி கொடுக்க தீர்மானித்திருக்கிறேன். என் அன்பான வேண்டுகோளை கட்டளையாக ஏற்றுக் கொள்கிறேன்.
கருணாநிதியின் இந்த உண்ணாவிரதம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்மஸ்ரீ விருதை உதறினார் பாரதிராஜா - திருப்பி அனுப்புகிறார்

திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், பாரதிராஜா எதையும் எதிர்பாராதவன். எனக்கு நாற்காலி கனவு கிடையாது. `தமிழன்' என்பதற்கு இணையான நாற்காலி எதுவும் கிடையாது. இந்த நூற்றாண்டில் பிரபாகரனுடன் யாரையும் ஒப்பிட்டு சொல்ல முடியாது.
பிரபாகரனை சாதாரணமாக நினைக்காதீர்கள்.. நான் பிரபாகரனை சந்தித்தபோது, எனக்கு ரோல் மாடல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் என்றார். அவருடைய சுயசரிதையை அடிக்கடி படிப்பதாக கூறினார். அவரை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். 28 வருடங்களாக உறுதியாக இருக்கும் உரமுள்ள தமிழன். அவருக்கு மைக் பிடித்து பேச தெரியாது. செயலில்தான் காட்ட தெரியும். அவரை ஜெயிக்க முடியாத காரணத்தால், ராஜபக்சேவுக்கு இந்திய அரசு கொல்லைப்புற வழியாக ஆயுதங்களை அனுப்பி ஜெயிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. முழு முதல் குற்றவாளி மத்திய அரசு தான்.
உள்ளே போட்டாலும் கவலை இல்லை..
சோனியாவை விமர்சித்தால் தேச விரோத குற்றம் என்கிறார்கள். எங்களை உள்ளே தூக்கி போட்டாலும் கவலை இல்லை. நாங்கள் அரசியல்வாதிகளிடம் யாசகம் கேட்கவில்லை. எங்கள் சொந்த ரத்தங்களை, குழந்தைகளை, சகோதரிகளை காப்பாற்ற வேண்டும் என்றுதான் கேட்கிறோம். இதை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் விதமாக, எனக்கு மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புகிறேன் என்றார்.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...!
உலகெங்கும் பல நாடுகளில் பொருளாதாரநெருக்கடியும், அதனால் வளர்ச்சிபின்னடைவும் ஏற்பட்டுவரும் நிலையில், நம்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொடர்ந்து 9 சதவீதமாக இருக்கும் என, பிரணாப் முகர்ஜிஅறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. (16.2.2009ல் ராமதாஸ் அறிக்கை)
நாட்டில் வளர்ச்சி இல்லை. விவசாயம் இல்லை. மின்வெட்டு பிரச்னையும் தலை தூக்கியுள்ளதால் மக்கள் தேர்தலில்சரியான பாடம் புகட்டுவர். (15.4.2009 சிதம்பரத்தில் ராமதாஸ் பேட்டி)
ஜெயலலிதா அரசை தூக்கி எறிவது மட்டுமல்ல; திராவிட அரசியலில் இருந்தும் ஜெயலலிதா அகற்றப்பட வேண்டும். (30.4.2004 அருப்புக்கோட்டை கூட்டத்தில் வைகோ பேச்சு)
புரட்சித் தலைவிக்கு பிரதமராக எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. அவருக்கு பல மொழிகள் தெரியும். தெளிவானசிந்தனைவாதி. எடுத்த முடிவில் உறுதியாய் இருப்பார். தேர்தலுக்குப் பின் யார் பிரதமர் என்ற சூழல் உருவாகும்பட்சத்தில் புரட்சித் தலைவி பெயரை முன்மொழிவதில் முதல் ஆளாக நான் இருப்பேன். (19.4.2009 சென்னை பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு)












